லிபியா படகு விபத்து - 35பேர் உயிரிழப்பு

#Accident #Death
Prasu
3 years ago
லிபியா படகு விபத்து - 35பேர் உயிரிழப்பு

உள்நாட்டு போர் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் சட்டவிரோதமாக படகுகளில் ஐரோப்பாவை அடைய முற்படுகின்றனர்.

இவ்வாறு அதிக மக்கள் தொகையை கொண்டு படகுகளில் பயணம் மேற்கொள்ளும் போது அப்பயணங்கள் அபாயமாகிறது.அவ்வாறு லிபியா மேற்கு பகுதியில் அமைந்துள்ள சப்ரதா நகருக்கு அருகே கடலில் ஏற்பட்ட விபத்தால் பெண்கள், சிறுவர்கள் உள்பட 35 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் லிபிய கடலோர காவல்படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் மேலும் பலர் மாயமாகி உள்ளனர். அவர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!