ராணுவ தளவடாங்கள் பழுதுபார்க்கும் மையத்தில் ரஷியா தாக்குதல்

#Ukraine #Russia #Attack
Prasu
4 years ago
ராணுவ தளவடாங்கள் பழுதுபார்க்கும் மையத்தில் ரஷியா தாக்குதல்

ரஷியாவை சர்வதேச அளவில் தனிமைப்படுத்தும் முயற்சியாக கட்டுபாடற்ற தகவல்களையும் அரசியல் பிரசாரத்திலும் பிரிட்டன் ஈடுபட்டு வருகிறது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சம் மற்றும் அந்நாட்டின் உயர் அதிகாரிகள் சிலர் ரஷியாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக ரஷிய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

போரில் இதுவரை ரஷிய வீரர்கள் 20 ஆயிரம் பேர் வரை உயிரிழந்து இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

மேலும், ஜெலன்ஸ்கி கூறுகையில், உக்ரைன் தரப்பில் 3 ஆயிரம் வீரர்கள் உயிரிழந்து இருக்கின்றனர்.

மரியுபோல் நகரில் சண்டை தீவிரமாக நடைபெற்று வருகிறது. ரஷியா கூடுதல் படைகளை வரவழைத்துள்ளது. ரஷியா அணு ஆயுத தாக்குதலை நடத்தலாம்” என்றார். 

 கீவ் மாகாணத்தில் ரஷிய படையினரால் கொன்று புதைக்கப்பட்ட 900 பேரின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது - உக்ரைன் அரசு தகவல்

உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதற்கு எதிராக ரஷ்யா அமெரிக்காவை எச்சரித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அரசு தொடர்ந்து ஆயுதங்களை உக்ரைனுக்கு மாற்றினால்,

கணிக்க முடியாத விளைவுகள் ஏற்படும் என  அமெரிக்காவை ரஷியா எச்சரித்துள்ள்ளதாக  தி வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

ரஷியாவை ‘பயங்கரவாதத்தின் அரச ஆதரவாளராக நியமிக்குமாறு அமெரிக்காவிடம் ஜெலென்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி சமீபத்தில் ஜனாதிபதி ஜோ பைடனிடம்  ரஷியாவை பயங்கரவாதத்தின் அரசு ஆதரவாளராக

அறிவிக்கமாறு வேண்டுகோள் விடுத்ததாக மேற்கோள் காட்டி வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

மூழ்கிய ரஷிய ஏவுகணை கப்பல் ‘மோஸ்க்வா  இரண்டு உக்ரைன் ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாக அமெரிக்கா தற்போது நம்புகிறது என்று அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உக்ரைன் படைகள் நடத்திய தாக்குதலில் ரஷ்யாவின் உயிரிழப்புகள் இருப்பதாக அமெரிக்கா நம்புகிறது,

இருப்பினும் எண்ணிக்கை தெளிவாக இல்லை என அந்த அதிகாரி மேலும் கூறினார்.

முற்றுகையிடப்பட்ட நகரத்தில் உள்ள ஒரு எஃகு ஆலை மற்றும் அதைச் சுற்றியுள்ள மரியுபோலில் உக்ரைன் ரஷியா இடையே கடுமையான சண்டை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைன்  நகரமான மைகோலெய்வ் நகரில் ஷெல் தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் சக்தி வாய்ந்த குண்டுகள் பயன்படுத்தப்பட்டன

என்று மைகோலைவ் கவர்னர் விட்டலி கிம் டெலிகிராமில் தெரிவித்தார்.

 உக்ரைன் தலைநகர் கீவில் இருந்து ரஷிய படைகள் வெளியேறியுள்ளதை தொடர்ந்து, அங்கு உக்ரைன் போலீசார் மற்றும் ராணுவம் தீவிர ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இதில் அப்பாவி பொதுமக்கள் பலரின் உடல்கள் கொத்துக்கொத்தாக மீட்கப்பட்டு வருகின்றன.

இதுவரை 900-க்கும் மேற்பட்டோரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளதாக கீவ் பிராந்திய போலீஸ் படை தலைவர் ஆன்ட்ரிய் நெபிடோவ் கூறியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4