இரவு நன்றாக தூங்கிய பின்னும் பகல் தூக்கத்திற்கு வருவதற்கு காரணம் என்ன?

Prasu
4 years ago
இரவு நன்றாக தூங்கிய பின்னும் பகல் தூக்கத்திற்கு வருவதற்கு  காரணம் என்ன?

நம் வாழ்க்கையில் தூக்கம் என்பது ஒரு இன்றியமையாத செயல்பாடாக இருக்கிறது. நம் உடலையும் மனதையும் புத்துணர்ச்சியாக வைக்கவும், உடல் ஆரோக்கியமாக இருக்கவும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்கள் அண்டாமல் தடுக்கவும் உதவுகிறது போதுமான தூக்கம் இல்லாவிட்டால் மூளை சரியாக இயங்காது.

எனவே நமது ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு ஆழ்ந்த நிம்மதியான உறக்கம் முக்கியமானது . நம் வாழ்க்கையின் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்திலேயே கழிகிறது. ஒரு சிலர் இரவு 7 - 8 மணி நேரம் தூக்கத்திற்கு பின் நாள் முழுவதும் உற்சாகமாக இருப்பார்கள். ஆனால் ஒரு சிலரோ நீண்ட இரவு தூக்கத்திற்கு பின்னரும் பகலில் தூங்க ஏங்குவார்கள். வேலைகள் இருந்தாலும் கூட சிறிது நேர பகல் தூக்கத்திற்கு ஏங்கும் பலர், நாம் தூக்கத்திற்கு அடிமையாகி விட்டோமோ என்று நினைத்து கொள்வார்கள்.

இரவு தூக்கத்தில் பிரச்சனை இல்லாத போதும் பகலில் தூங்க வேண்டும் என்று தூங்குபவர்களுக்கு உடல்நல பிரச்சனைகள் ஏற்பட கூடும். அதிக தூக்கம் பிரச்சனைக்குரியது என்றும் அதிகம் தூங்குபவர்கள் நீரிழிவு, இதய நோய், பக்கவாதம் மற்றும் ஏன் மரணத்திற்கு கூட ஆளாக நேரிடும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பிரபல ஊட்டச்சத்து மற்றும் உணவியல் நிபுணரான டாக்டர் அஸ்மா ஆலம் இதுபற்றி கூறுகையில், தூக்கத்திற்கு அடிமையாவது என்பது ஒரு மருத்துவ நிலை அல்ல.

ஆனால் அதிகப்படியான தூக்கத்திற்கு வழிவகுக்கும் வேறு சில கன்டிஷன்கள் உள்ளன. ஒரு சராசரி வயதுடைய பெரியவர்களுக்கு குறைந்தது 7 மணிநேரம் இடையூறு இல்லாத இரவு தூக்கம் தேவை. இது படுக்கையில் செலவழித்த நேரத்தை அல்ல நிம்மதியாக தூங்கிய நேரத்தை குறிக்கிறது. 7 மணிநேரம் நன்றாக தூங்கிய பிறகும் ஒருவர் சரியாக ஓய்வெடுக்கவில்லை என்பது போல உணர்ந்து, அடுத்த நாள் முழுவதும் தூங்க வேண்டும் என்று ஆசைப்பட்டால், தாங்கள் தூக்கத்திற்கு அடிமையாகிவிட்டதாக அவர்கள் உணர ஆரம்பிக்கலாம்.

எனினும் இந்த அதீத அயர்ச்சியான்து கவலை, மனச்சோர்வு அல்லது சில மருந்துகளை உட்கொள்வது போன்றவற்றால் ஏற்படும் அடிப்படை பிரச்சினையின் அறிகுறியாக இருக்கலாம். அதே போல அதிக தூக்கம் ஹைப்பர் சோம்னியாஸ் என்ற நிலையாலும் ஏற்படலாம். இது ஒரு தூக்கக் கோளாறு, போதுமான அளவு இரவு தூக்கம் இருந்த போதிலும் பகலில் விழிப்புடன் இருக்க இயலாமையை இது ஏற்படுத்தும் என்கிறார் அஸ்மா ஆலம்.

இது தவிர நர்கோலெப்ஸி எனப்படும் நாள்பட்ட தூக்க கோளாறு, சுவாசம் மீண்டும் மீண்டும் நின்று தொடங்கும் தீவிர தூக்க கோளாறான ஸ்லீப் அப்னியா மற்றும் டிசானியா உள்ளிட்ட பலவற்றால் அதிக பகல்நேர தூக்கம் ஒருவருக்கு ஏற்படலாம். மேலும் பேசிய நிபுணர் அஸ்மா ஆலம், தூக்கத்திற்கு அடிமையாவது ஒரு மருத்துவ நிலையாக வரையறுக்கப்படவில்லை. எனினும் ஒருவர் ஹைப்பர்சோம்னியா போன்ற தூக்கக் கோளாறை கண்டறிய உதவும் அறிகுறிகள் மீது கவனம் செலுத்தலாம்.

இந்த அறிகுறிகளில் எரிச்சல், நினைவாற்றல் குறைபாடு, பிரெயின் ஃபாக், சோர்வு, மீண்டும் மீண்டும் தூங்க வேண்டிய அவசியம், நீண்ட தூக்கத்திற்குப் பிறகு எழுந்திருப்பதில் சிரமம் உள்ளிட்டவை அடங்கும். எனினும் அதிகம் தூங்கும் பழக்கத்தை கொண்டிருக்கும் ஒருவர், சரியான தீர்வை கண்டறிய மருத்துவ நிபுணரை அணுகுவது சிறந்தது என்கிறார் ஆலம்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4