மேலும் 19 இலங்கையர்கள் தனுஷ்கோடியில் அகதிகளாக தஞ்சம்!
#SriLanka
#India
Prasu
3 years ago

இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு மேலும் 19 பேர் அகதிகளாக வந்துள்ளதாக தனுஷ்கோடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனுஷ்கோடி அருகே அரிசல்முனைக்கு வந்த 19 பேரிடம் கியூபிரிவு பொலிஸார் விசாரணை மேற்கொண்டதையடுத்து, ஏற்கனவே 20 பேர் வந்தநிலையில் மேலும் 19 பேர் இன்று தனுஷ்கோடிக்கு வந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
கடும் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக இலங்கை தமிழர்கள் கள்ளப்படகு மூலம் கடல் வழியாக தனுஷ்கோடிக்கு வந்து தஞ்சமடைய வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.



