அரசியல் ஸ்திரத்தன்மை அற்ற சூழலில் ஏவுகணை பரிசோதனை நடத்திய பாகிஸ்தான்

#Pakistan #Missile
Prasu
3 years ago
அரசியல் ஸ்திரத்தன்மை அற்ற சூழலில் ஏவுகணை பரிசோதனை நடத்திய பாகிஸ்தான்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்றிரவு 8 மணியளவில் நடைபெற கூடிய சூழலில், ஏவுகணை சோதனையை அந்நாடு இன்று நடத்தி உள்ளது.

இதுபற்றி பாகிஸ்தான் ஆயுத படையின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில், ஷாகீன்-3 ஏவுகணை பரிசோதனை வெற்றியடைந்து உள்ளது.  இந்த பரிசோதனையின் நோக்கம், நாட்டிலுள்ள ஆயுத அமைப்பின் பல்வேறு வடிவம் மற்றும் தொழில்நுட்ப அளவீடுகளை மறுமதிப்பீடு செய்வது ஆகும் என தெரிவித்து உள்ளது.

இந்த ஏவுகணை 2,750 கி.மீ. தொலைவிலுள்ள இலக்கை தாக்கி அழிக்க கூடியது.  கடந்த ஆண்டு ஜனவரியிலும், இதேபோன்றதொரு ஏவுகணை பரிசோதனையை பாகிஸ்தான் நடத்தியிருந்தது.  திடஎரிபொருளை கொண்டு செலுத்தப்பட்ட இந்த ஏவுகணை பி.எஸ்.ஏ.சி. எனப்படும் சாதனத்துடன் செயல்பட கூடியது.  இதற்கு முன்பு இந்த ஏவுகணை பரிசோதனையானது கடந்த 2015ம் ஆண்டு மார்ச்சில் முதன்முறையாக நடத்தப்பட்டது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்றிரவு 8 மணியளவில் வாக்கெடுப்பு நடத்தப்பட கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அரசியல் ஸ்திரத்தன்மை அற்ற சூழலில் அந்நாடு இந்த ஏவுகணை பரிசோதனையை நடத்தி உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!