இந்தியாவை பிடித்திருந்தால் பாகிஸ்தானை விட்டு வெளியேறுங்கள் - மரியம் நவாஸ் இம்ரான் கானுக்கு வலியுறுத்தல்

#Pakistan #ImranKhan
Prasu
3 years ago
இந்தியாவை பிடித்திருந்தால் பாகிஸ்தானை விட்டு வெளியேறுங்கள் - மரியம் நவாஸ்  இம்ரான் கானுக்கு வலியுறுத்தல்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், தமது அரசு மீது அந்நாட்டு எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை எதிர்கொண்டு வருகிறார். 

நேற்று பாகிஸ்தான் மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர்,  இந்தியா ஒரு கௌரவமான நாடு என்று கூறினார். தாம் இந்தியாவுக்கு எதிரானவன் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். 

இந்தியா இறையாண்மை கொண்ட நாடாக இருப்பதால்  அதன் நலனுக்கு எதிராக எந்தவொரு வல்லரசு நாடும் நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவரும், முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சியின் துணைத் தலைவருமான மரியம் நவாஸ்,  இம்ரானுக்கு இந்தியாவை மிகவும் பிடித்திருந்தால் அண்டை நாட்டிற்குச் செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

இம்ரான்கானை இனி பாகிஸ்தான் பிரதமராக கருத முடியாது என்றும், அதிகாரத்தை இழந்து விட்டதால் அவருக்கு பைத்தியம் பிடித்து விட்டதாகவும் மரியம் குறிப்பிட்டுள்ளார். சுயநினைவு இல்லாத ஒருவர், ஒட்டு மொத்த நாட்டையும் வீழ்த்தி  நாசம் செய்து இனிமேலும் அனுமதிக்க முடியாது என்றும் மரியம் நவாஸ் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!