எரிவாயு வரிசையில் நின்ற நாடாளுமன்ற உறுப்பினர்
Prathees
3 years ago

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வி. ராதாகிருஷ்ணன் (தமிழ் முற்போக்கு கூட்டணி) எரிவாயு சிலிண்டரை கொள்வனவு செய்வதற்காக வரிசையில் நின்றிருந்ததை காணமுடிந்தது.
தனது வீட்டிற்கான வீட்டு எரிவாயு சிலிண்டரை கொள்வனவு செய்வதற்காக நுவரெலியா காஸ் டீலர் கடைக்கு சென்று காஸ் சிலிண்டரை கொள்வனவு செய்வதற்காக வரிசையில் காத்திருந்ததாகபாராளுமன்ற உறுப்பினர் விராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் மீண்டும் பாரிய சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகிறமையினால் விற்பனை முகவர்களிடம் இருந்து எரிவாயு சிலிண்டர்களை நுகர்வோர்கள் பெற முடியாமல் சிரமப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



