ஜனாதிபதி செயலகம் நோக்கி படையெடுக்கும் பெருந்திரளான மக்கள்!
Mayoorikka
3 years ago

கொழும்பு காலி முகத்திடலில் பெரும் எண்ணிக்கையிலான மக்களின் பங்குபற்றுதலுடன் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த போராட்டத்தில் தொழில் வல்லுநர்கள், இளைஞர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கலந்துகொள்வதாகவும், இது பாரிய மக்கள் போராட்டமாக உருவாகும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகம் நோக்கி நகர்வதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை முதன்முறையாக அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் ஒன்றிணைந்து இந்த கண்டன ஊர்வலம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
பல்கலைக்கழக மாணவர்களின் இந்த கூட்டு எதிர்ப்பு பேரணி நுகேகொடையில் இருந்து ஆரம்பமாகி உள்ளது.





