இன்று முதல் சதொசவில் நிவாரண பொதி !

Prabha Praneetha
3 years ago
 இன்று முதல் சதொசவில்  நிவாரண பொதி !

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சந்தை விலையிலும் பார்க்க குறைந்த விலையிலான 5 வகை பொருட்களை உள்ளடக்கிய நிவாரண பொதியை இலங்கை சதொச விற்பனை வலைப்பின்னல் ஊடாக வழங்குவதற்கு வர்த்தக அமைச்சு ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளது.

இதற்கமைய நிவாரணப் பொதிகளை இன்று தொடக்கம் சதொச கிளைகள் ஊடாக விற்பனை செய்யப்படவுள்ளது .

இதன்படி அரிசி, பால்மா, சீனி, தேயிலை உள்ளிட்ட பொதி ஒன்றின் விலை 1950.00 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

பொதுவாக சந்தையில் நிலவும் விலையுடன் ஒப்பிடுகையில் இந்த 5 வகை பொருட்களுகளை 700 ரூபா அல்லது அதற்கு மேற்பட்ட தொகைக் கழிவுடன் புத்தாண்டு நிவாரணப் பொதியாக நுகர்வோரினால் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் வர்த்தக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!