மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்திற்கு 31 ஆண்டுகள் சிறை

#Pakistan #India #Attack
Prasu
3 years ago
மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்திற்கு 31 ஆண்டுகள் சிறை

மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந்தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் கடல் மார்க்கமாக நுழைந்து குண்டுகளை வெடித்தும், துப்பாக்கியால் சுட்டும் கொடூர தாக்குதல்கள் நடத்தினர். 

166-பேர்  கொன்று குவிக்கப்பட்ட இந்த தாக்குதல்களை பாகிஸ்தானில் அமர்ந்து கொண்டு, மூளையாக இருந்து செயல்படுத்தியவர் ஹபீஸ் சயீத்.லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் நிறுவனர். அந்த இயக்கம் தடை செய்யப்பட்ட நிலையில், தற்போது ஜமாத் உத் தவா என்ற இயக்கத்தை நடத்தி வருகிறார். 

ஹபீஸ் சயீத்திற்கு எதிராக பாகிஸ்தானின் லாகூரில் உள்ள பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில்  பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டியதாக லாகூரில் உள்ள பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்,  பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டிய வழக்கு ஒன்றில் ஹபீஸ் சயீத்திற்கு 31 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஹபீஸ் சயீத்தின் சொத்துக்களை முடக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹபீஸ் சயீத் கட்டிய மசூதி மற்றும் மதரசா ஆகியவையும் அரசு கையகப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஹபீஸ் சயீத்திற்கு ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் அபராதமாகவும் விதிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!