நிதியமைச்சின் புதிய செயலாளர் கடமைகளைப் பொறுப்பேற்றார்
Prabha Praneetha
3 years ago
-1-1-1-1-1-1-1-1-1-1-1-1.jpg)
நிதியமைச்சின் புதிய செயலாளர் எம். மஹிந்த சிறிவர்தன இன்று கடமைகளைப் பொறுப்பேற்றார்
இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் நிதி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இவர் இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநராகவும் அதன் பொருளாதார ஆய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
மேலும் இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளுக்கான சர்வதேச நாணய நிதியத்தின் மாற்று நிர்வாக இயக்குனராக பணியாற்றியுள்ளார்,
அத்தோடு, நிதி அமைச்சின் நிதிக் கொள்கைத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாகவும் எம். மஹிந்த சிறிவர்தன பணியாற்றியுள்ளார்.



