பத்தரமுல்லயில் போராட்டக்காரர்களுக்கு கண்ணீர் புகை.. நீர்த்தாரை பிரயோகம்
Prathees
3 years ago

பத்தரமுல்ல பொல்துவ சந்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இதனால், சுற்றுவட்டார சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
பல்கலைக்கழக மாணவர்களினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.



