இலங்கை நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயலும் பல்கலைக்கழக மாணவர்களை தடுக்க முயற்சியில் இராணுவம் (LIVE)
Nila
3 years ago

பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக ராஜகிரிய பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் வினைத்திறனற்ற நிர்வாகத்திற்கு எதிராக இவ்வாறு பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (08) நண்பகல் முதல் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.
பத்தரமுல்லை - பொல்துவ சந்திக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து பல்கலைக்கழக மாண ஒன்றியத்தின் மாணவர்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.



