இலங்கையில் மீண்டும் நிதி அமைச்சராகும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச?
Nila
3 years ago

நாட்டின் புதிய அமைச்சரவை இன்றைய தினம் பதவியேற்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டுவரும் நிலையில் நிதி அமைச்சர் பதவி பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கு வழங்கப்படவுள்ளதாக அரசாங்கத்தின் உள்ளகத் தகவல்களை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை ராஜபக்ச குடும்பத்தில் வேறொருவருக்கும் அமைச்சுப்பதவி வழங்கப்படமாட்டாது என்றும் முன்னைய அமைச்சரவை அமைச்சர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.



