'ஹைப்பர்சோனிக்' ஏவுகணை தயாரிக்க அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா நாடுகள் திட்டம்

#UnitedKingdom #United_States #Australia #Weapons
Prasu
4 years ago
'ஹைப்பர்சோனிக்' ஏவுகணை தயாரிக்க அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா நாடுகள் திட்டம்

'ஹைப்பர்சோனிக்' ஏவுகணை தயாரிக்க அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா நாடுகள் 

பசிபிக் கடல் பகுதியில் சீன ராணுவத்தின் ஆதிக்கம் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தவும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலிய நாடுகள் இணைந்து 'ஆகஸ்' என்ற பாதுகாப்பு கூட்டணியை கடந்த ஆண்டு செப்டம்பரில் உருவாக்கின.

எந்தவொரு ஏவுகணை தடுப்பு ஆயுதத்தாலும் இடைமறிக்க முடியாத அளவுக்கு வேகமாக பாயக்கூடிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை தயாரிப்பில் சீனா மற்றும் ரஷ்யா ஈடுபட்டு உள்ளன. ரஷ்யா இந்த ஏவுகணை சோதனையில் கடந்த ஆண்டே ஈடுபட்டதை அமெரிக்க ராணுவம் உறுதி செய்துள்ளது.

உக்ரைன் போரில் ரஷ்யா ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை பயன்படுத்தி வருகிறது. இதையடுத்து அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலிய பாதுகாப்பு கூட்டணியான 'ஆகஸ்' அமைப்பு சார்பாக ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்க மூன்று நாட்டு தலைவர்களும் முடிவு செய்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4