உக்ரைன் ரஷ்ய போர் - ரஷியாவின் தாக்குதலுக்கு 165 குழந்தைகள் உயிரிழப்பு

#Ukraine #War #Russia #Death
Prasu
4 years ago
உக்ரைன் ரஷ்ய போர் - ரஷியாவின் தாக்குதலுக்கு 165 குழந்தைகள் உயிரிழப்பு

ஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வாங்குவதை தற்போதைக்கு நிறுத்த முடியாது என ஜெர்மனி தெரிவித்துள்ளது. ரஷியாவிடமிருந்து எரிபொருள் வாங்குவதை நிறுத்த சில காலம் தேவைப்படுகிறது என ஜெர்மனி நிதி மந்திரி தெரிவித்தார்.   

சுமி பிராந்தியத்திலும் பொதுமக்கள் டார்ச்சர் செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக கவர்னர் தெரிவித்துள்ளார்.

ரஷியா தாக்குதலில் 165 குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும், 266 குழந்தைகள் காயம் அடைந்ததாகவும் உக்ரைன் தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய கமிஷன் தலைவர், ஐரோப்பிய யூனியன் வெளியுறவுத்துறை மந்தரி கீவ் செல்ல இருப்பதாக ஸ்லோவேனியா பிரதமர் தெரிவித்துள்ளார்.

புச்சா நகரில் ரஷிய படைகள் நிகழ்த்திய படுகொலைகளுக்கு பதிலடியாக 40 ரஷிய தூதர்களை வெளியேற்ற ஜெர்மனி அரசு முடிவு செய்துள்ளது. இதேபோல் பிரான்ஸ் அரசும் தனது நாட்டில் உள்ள 35 ரஷிய தூதர்களை வெளியேற்ற உள்ளதாக தெரிவித்துள்ளது. உக்ரைன் ஆதரவு நாடுகளும் ரஷிய தூதர்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

உக்ரைன் தலைநகர் கீவ் அருகே உள்ள ரஷிய படைகளில் மூன்றில் இரண்டு பங்கு படைகள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் அந்த படையினர் பெலாரஸில் ஒருங்கிணைக்கப்பட்டு, உக்ரைனில் உள்ள வேறு பகுதிகளுக்கு அனுப்பப் படுவார்கள் என எதிர்பார்க்கப் படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
ரஷிய வீரர்கள் புச்சா நகரை விட்டு வெளியேறிய பிறகு கண்டெடுக்கப்பட்ட உடல்கள் அதிர்ச்சி அளிப்பதாக அல்பேனிய பிரதமர் எடிராமா தெரிவித்துள்ளார். இது  போன்ற கொடூர குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். உக்ரைன் பொதுமக்கள் மீதான தாக்குதல் தமது நாட்டில் நடைபெற்ற போரை நினைவு படுத்துவதாக கொசோவோ பிரதமர் அல்பின்குர்தி குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4