மக்களின் ஆர்ப்பாட்டத்திற்கு பயந்து உலங்கு வானூர்தியில் தப்பிச்சென்ற அரசியல் பிரமுகர் யார்?

Nila
3 years ago
மக்களின் ஆர்ப்பாட்டத்திற்கு பயந்து உலங்கு வானூர்தியில் தப்பிச்சென்ற அரசியல் பிரமுகர் யார்?

கேகாலை பகுதியில் இன்று காலை அதிகளவான மக்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் கேகாலை - சுதந்திரமாவத்தையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, ​​தனியார் விமான சேவைக்கு சொந்தமான உலங்கு வானூர்தி ஒன்று கேகாலை மாநகர சபை மைதானத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

கேகாலை பிரதேசத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவரும் அவரது குடும்பத்தினரும் உலங்கு வானூர்தியில் அப்பகுதியை விட்டு தப்பிச்சென்றதாக பிரதேசவாசிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

குறித்த உலங்கு வானூர்தி கேகாலையில் இருந்து கண்டி நோக்கி புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத்தின் இல்லமும் கேகாலை மாநகர சபை விளையாட்டு மைதானத்துக்கு அருகாமையில் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!