இடைக்கால அரசாங்கத்தை நியமிப்பதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடமிருந்து சாதகமான பதில்: விமல்
Prathees
3 years ago

சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை நியமிக்கும் யோசனைக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடமிருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுடன் இணைந்து ஜனாதிபதி மற்றும் பிரதமரை தனித்தனியாக சந்தித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் வீரவன்ச தெரிவித்தார்.



