Dhanush: அதற்கும் 'செக்' வைத்த லதா ரஜினிகாந்த்... வசமாக சிக்கிய தனுஷ்!

#TamilCinema #Actor #Actress
Dhanush: அதற்கும் 'செக்' வைத்த லதா ரஜினிகாந்த்... வசமாக சிக்கிய தனுஷ்!

லதா ரஜினிகாந்த் தனுஷ் புதிதாக படம் இயக்கவுள்ளதற்கும் குடைச்சல் கொடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

லதா ரஜினிகாந்த் தனுஷ் புதிதாக இயக்கவுள்ள படத்திற்கும் குடைச்சல் கொடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மனக்கசப்பு

நடிகர் தனுஷும் ஐஸ்வர்யாவும் கடந்த ஜனவரி மாதம் 17 ஆம் தேதி பிரிந்து வாழப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். கடந்த 4 ஆண்டுகளாக இருவருக்குள்ளும் மனக்கசப்பு இருந்த நிலையில் இனியும் சேர்ந்து வாழ்வது சரியாக இருக்காது என இருவரும் ஒரு மனதாக பிரிந்து வாழ முடிவு செய்தனர்

ஐஸ்வர்யா விருப்பம்

ஆனால் இருவரின் முடிவிலும் இரு குடும்பத்தினருக்கும் சம்மதம் இல்லை என தெரிகிறது. இதுகுறித்து இருவரிடமும் குடும்பத்தினர் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். குடும்பத்தினரின் பேச்சு மற்றும் அப்பாவின் உடல் நிலையை கருத்தில் கொண்டு தனுஷுடன் மீண்டும் சேர்ந்து வாழ ஐஸ்வர்யா விருப்பம் தெரிவித்தார்.

முரண்டு பிடிக்கும் தனுஷ்

ஆனால் தனுஷ், இனி சேர்ந்து வாழ்ந்தால் பிரச்சனைதான் வரும் என கூறி முரண்டு பிடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனுஷை வழிக்கு கொண்டு லதா ரஜினிகாந்த் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தகவல் பரவி வருகிறது. குறிப்பாக தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் தனுஷை வைத்து படம் பண்ணக்கூடாது என தனது செல்வாக்கை பயன்படுத்தி பேசி வருவதாக கூறப்பட்டது.

புதிய படம் இல்லை

அதற்கேற்றார் போல், ஐஸ்வர்யாவை பிரிவதாக அறிவித்த பிறகு தனுஷ் புதிதாக எந்த படத்திலும் ஒப்பந்தமாகவில்லை. வாய்ப்பு வரும்போது நடித்துக்கொள்ளலாம் என முடிவு செய்துள்ள தனுஷ், இயக்கத்திலாவது இறங்கலாம் என முடிவு செய்துள்ளார். நடிகர் நாகார்ஜூனாவை வைத்து நான் ருத்ரன் என்ற படத்தை தனுஷ் இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

உள்ளடி வேலை

இந்நிலையில் தனுஷ் இயக்கும் படத்தில் எந்த டெக்னீஷியன்களும் வேலை செய்யக்கூடாது ரஜினியின் குடும்பத்தினர் உள்ளடி வேலையில் இறங்கியதாக கூறப்படுகிறது. இதனால் தனுஷ் பயங்கர கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

கண்ணிவெடி

எந்தப்பக்கம் திரும்பினாலும் தனுஷ் ரஜினியின் குடும்பத்தினர் செக் வைத்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஐஸ்வர்யாவின் நடவடிக்கையால் கடுப்பில் உள்ளார் தனுஷ். இந்நிலையில் அவரது கெரியருக்கு வேட்டு வைக்கும் வகையில் திரும்பும் பக்கமெல்லாம் அவருக்கு ரஜினி குடும்பத்தினர் கண்ணிவெடி வைப்பது அவரது கோபத்தை இன்னும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!