2023-ம் ஆண்டு உலகில் மிகப்பெரிய போர் ஏற்படும்- நாஸ்டர்டாம் கணிப்பில் அதிர்ச்சி

#War
Prasu
3 years ago
2023-ம் ஆண்டு உலகில் மிகப்பெரிய போர் ஏற்படும்- நாஸ்டர்டாம் கணிப்பில் அதிர்ச்சி

பிரான்ஸ் நாட்டில் 15-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் நாஸ்டர்டாம். இவர் எதிர்காலத்தில் உலகில் என்னென்ன நடக்கும் என்பதை பாடல்கள் போல எழுதி வைத்து உள்ளார். சித்தர்கள் பேசும் பரிபாஷை போன்று அந்த பாடல் வரிகள் உள்ளன. அந்த வரிகளில் உள்ள அர்த்தங்கள்படி குறிப்பிட்ட நிகழ்வுகள் நடந்தது பிறகே தெரிய வந்தது. குறிப்பாக நாஸ்டர்டாம் மறைவுக்கு பிறகுதான் அவர் எழுதி வைத்துள்ள குறிப்புகள் ஒவ்வொன்றாக நடக்க தொடங்கின.

450 ஆண்டுகளுக்கு முன்பு அவரது குறிப்புகள் புத்தக வடிவில் வெளியிடப்பட்டன. அந்த புத்தகத்தில் ஒவ்வொரு ஆண்டும் எத்தகைய சம்பவங்கள் உலகில் நடக்கும் என்பதை நாஸ்டர்டாம் தெள்ளத்தெளிவாக கூறி உள்ளார். ஹிட்லர் செய்த அட்டகாசம், ஜான் கென்னடி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் போன்றவற்றை நாஸ்டர்டாம் தனது புத்தகத்தில் எழுதி இருந்தார்.

அமெரிக்காவில் தீவிரவாதிகள் விமான தாக்குதல் நடத்திய சம்பவத்தையும் அவர் சூசகமாக எழுதி இருந்தார். உலகப்போர்கள் பற்றியும் அவர் குறிப்பிட்டு உள்ளார். அந்த வகையில் இந்த ஆண்டு (2022) 3-ம் உலகப்போரின் தொடக்கமாக சம்பவங்கள் நடக்கும் என்று தனது புத்தகத்தில் எழுதி உள்ளார். அவரது இந்த கணிப்பை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது ரஷியா-உக்ரைன் போர் நடந்து வருகிறது.

2022-ம் ஆண்டு உலகில் அணுகுண்டுகள் வெடிக்கும். அதனால் ஏற்படும் கதிர்வீச்சால் உலகின் தட்ப வெப்ப நிலை மாறி பனிப்பாறைகள் உருகும். இது கடல் நீர் மட்டத்தை அதிகரிக்க செய்யும் என்றும் எழுதி உள்ளார். இவை ஒவ்வொன்றாக நடப்பதாக நிபுணர்கள் சொல்லுகிறார்கள்.

இந்தநிலையில் 2023-ம் ஆண்டு மிகப்பெரிய உலகப்போர் வெடிக்கும் என்று நாஸ்டர்டாம் கூறி இருக்கிறார். உலகமே இருளில் மூழ்கும் என்றும் அவர் கணித்து உள்ளார். இது ஜோதிட ரீதியாக நம்பிக்கை வைத்திருக்கும் மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!