நோட்டா மாநாட்டில் பங்கேற்க உக்ரைனுக்கு அழைப்பு

#Ukraine
Prasu
4 years ago
நோட்டா மாநாட்டில் பங்கேற்க உக்ரைனுக்கு அழைப்பு

பெல்ஜியம் நாட்டில் ஏப்ரல் மாதம் 6, 7 தேதிகளில் நோட்டோ மாநாட்டில் பங்கேற்க உக்ரைன் நாட்டிற்கு அழைப்பு வந்துள்ளது.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் நிலையில் பெல்ஜியம் நாட்டில் பிரசெல்ஸில் வைத்து ஏப்ரல் மாதம் 6,7ம் தேதிகளில் நடைபெறும் நேட்டோ உச்சி மாநாட்டில் பங்கேற்க உக்ரைனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மாநாட்டில் ஜார்ஜியா, பின்லாந்து, ஸ்வீடன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான் மற்றும் கொரியா குடியரசு போன்ற நாடுகள் (வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு) அழைக்கப்பட்டுள்ளதாக கிவ் இன்டிபென்டன்ட் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இஸ்தான்புல்லில் இன்று நடைபெற்ற ரஷியாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான பிரதிநிதிகள் அளவிலான கூட்டத்தைத் தொடர்ந்து, ரஷிய பிரதிநிதிகள் கிவ் மற்றும் செர்னிஹிவ் திசைகளில் இராணுவ நடவடிக்கைகளில் வியத்தகு குறைப்பு மற்றும் ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையேயான சந்திப்பின் சாத்தியக்கூறுகளை அறிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4