இலங்கையில் வரலாறு காணாத அளவு உச்சத்தை தொட்டது தங்கத்தின் விலை!
#SriLanka
Nila
3 years ago

இலங்கையில் இன்று தங்கத்தின் விலையில் வரலாறு காணாத உயர்வு பதிவாகியுள்ளது.
தங்க விற்பனையாளர்களின் இன்றைய கூற்றின் படி, 24 கரட் தங்க நாணயத்தின் விலை 2,00,000 ரூபாவாகும்.
இதேவேளை, 22 கரட் தங்க நாணயத்தின் விலை 1,85,000 ரூபாவாக உயர்ந்துள்ளது.
தங்கத்தின் விலை அதிகரிப்புடன், உள்ளூர் சந்தையில் தங்கத்திற்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.



