இலங்கையில் மீண்டும் எரிவாயுவின் விலையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதா?
#SriLanka
#Litro Gas
#prices
Nila
3 years ago
-1-1-1-1-1-1-1-1-1-1.jpg)
எரிவாயு விலை தொடர்ந்தும் அதிகரிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
லிட்ரோ எரிவாயுவின் விலையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதா? என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், எதிர்வரும் 4ஆம், 5ஆம் திகதிக்குள் எரிவாயு தட்டுப்பாடு நீங்கும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டு மக்களின் அசௌகரியங்கள் குறையும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



