கட்டணத்தை உயர்த்துவதில் முறையான நடைமுறைகளைப் பின்பற்றவும் - ஸ்டேஷன் மாஸ்டர்கள்
#SriLanka
#Railway
#prices
Mugunthan Mugunthan
3 years ago

ரயில் கட்டணங்கள் திருத்தப்பட வேண்டுமாயின், அது முறையான நடைமுறைகளுக்கு அமையவே மேற்கொள்ளப்பட வேண்டுமே தவிர, அவசர அவசரமாக அல்ல என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பஸ் கட்டணங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதால், ரயில் கட்டணங்களை திடீரென திருத்த முடியாது என அதன் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.
ரயில் கட்டணத்தை திருத்துவது தொடர்பாக நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அதன்படி, கட்டண திருத்தம் அமுல்படுத்தப்படும் திகதி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.



