பேராதனை வைத்தியசாலையில் நாளாந்த சத்திரசிகிச்சைகள் மீண்டும் ஆரம்பம்

Prasu
3 years ago
பேராதனை வைத்தியசாலையில் நாளாந்த  சத்திரசிகிச்சைகள் மீண்டும் ஆரம்பம்

பேராதனை வைத்தியசாலையில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக அனைத்து சத்திரசிகிச்சைகளும் இடைநிறுத்தப்படுவதாக பேராதனை வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அர்ஜுன திலகரத்ன முன்னதாக தெரிவித்திருந்தார்.

எனினும் குறித்த தீர்மானம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் இன்று (29) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் சத்திரசிகிச்சைகளுக்குத் தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்கு மருத்துவ விநியோகப் பிரிவு உறுதியளித்துள்ளது.

எனவே நாளாந்த சத்திரசிகிச்சைகளை இடைநிறுத்துவதற்கான தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை இந்த விடயம் தொடர்பில் இந்தியாவினால் எவ்வாறு உதவ முடியும் என்பது தொடர்பில் ஆராயுமாறு இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தனது டுவிட்டர் பதவில் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!