சாவகச்சேரியில் திருமதி. சுவர்ணா பஞ்சலிங்கம் நேற்று உலர் உணவுப்பொதிகளை வழங்கி வைத்துள்ளார். (Photos)

#swissnews #SriLanka #Food
சாவகச்சேரியில் திருமதி. சுவர்ணா பஞ்சலிங்கம் நேற்று உலர் உணவுப்பொதிகளை வழங்கி வைத்துள்ளார். (Photos)

யாழ். சாவகச்சேரி, கையலாயபிள்ளை வீதியை சேர்ந்தவரும், தற்போது சுவிஸில் வாழ்ந்து வரும் திருமதி. சுவர்ணா பஞ்சலிங்கம் நெருக்கடி நிலைமையை கருத்திற்கொண்டு ஒவ்வொன்றும் பத்தாயிரம் ரூபா பெறுமதிமிக்க உலர் உணவுப்பொதிகளை நன்கொடையாக அவரது பகுதியைச்சார்ந்த உறவுகளுகளுக்கு நேற்று 27-03-2022 அன்று சுப்பர் மார்க்கட் ஒன்றினுாடாக வழங்கி வைத்துள்ளார். 

சுவிற்சலாந்து, சூரிச்சில் வாழ்ந்து வரும் இவர் முன்னாள் யாழ். பல்கலைக்கழக கலைப்பட்டதாரியும், கைதடி வீரசிங்கம் பாடசாலை ஆசிரியையுமாவார். அத்துடன் இவர் சாவகச்சேரியைச் சேர்ந்த முன்னாள் அம்பிகை அரிசியாலை உரிமையாளரான காலஞ்சென்ற பரமு சிவசுந்தரத்தின் பேத்தியும், திரு. லோகசுந்தரம், திருமதி. லோ. சந்திரவதனாவின் புதல்வியுமாவார்.

இக்கட்டான இவ்வேளையில் இவரது நன்கொடையை மக்கள் வரவேற்பதோடு, இவரைப்போன்ற மேலும் பல எமது உறவுகள் தத்தம் பகுதிகளில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதை லங்கா4 ஊடகம் வரவேற்கிறது.

 

 

 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4