கோட்டாவை சந்தித்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்!
#Gotabaya Rajapaksa
Mayoorikka
3 years ago

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுவை சற்றுமுன்னர் சந்தித்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், நிதி அமைச்சரை இன்று சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.
இலங்கையின் பொருளாதார நிலைமை மற்றும் இந்தியாவின் ஆதரவு குறித்து இந்த சந்திப்பின் போது கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.
எதிர்வரும் காலங்களிலும் இந்தியா, இலங்கைக்கு உதவிகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர், இதன்போது உறுதியளித்துள்ளார்.



