கொழும்பில் பிம்ஸ்டெக் மாநாடு இன்று ஆரம்பம்

Mayoorikka
3 years ago
கொழும்பில் பிம்ஸ்டெக் மாநாடு இன்று ஆரம்பம்

தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளான இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், பூட்டான், மியான்மர், நேபாளம், தாய்லாந்து ஆகிய 7 நாடுகளுடன் ‘பிம்ஸ்டெக்’ என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த நாடுகளிடையே பொருளாதார ஒத்துழைப்புக்காக பாடுபட்டு வருகிறது.

‘பிம்ஸ்டெக்’ 5ஆவது உச்சி மாநாட்டை இலங்கை நடத்துகிறது. இலங்கையில் இன்று முதல் 30ஆம் திகதிவரை நடக்கிறது. நேரடியாகவும், காணொலி காட்சி மூலமாகவும் மாநாடு நடக்கிறது.

பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் வெளிவிவகார அமைச்சர்கள் கலந்துகொள்வதற்காக இலங்கை வந்துள்ளனர்.

மியான்மர் வெளியுறவு மந்திரி காணொலி காட்சியில் பங்கேற்று பேசுகிறார்.

30ஆம் திகதி, ஜனாதிபதி கோட்டாபய ராஷபக்ஷ தலைமையில் நடக்கும் அமர்வில், இதர நாடுகளின் தலைவர்கள் காணொலி காட்சி மூலம் பங்கேற்கிறார்கள். அமைப்பின் எதிர்காலம் குறித்து விவாதிக்கிறார்கள்.

உச்சிமாநாடு மற்றும் தொடர்ச்சியான கூட்டங்களின் போது, பிராந்தியக் குழுவாக பிம்ஸ்டெக் அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து பிரதிநிதிகள் இதன்போது கலந்துரையாடுவர்.

இந்த உச்சிமாநாட்டின் போது, பிம்ஸ்டெக் சாசனம் ஏற்கப்பட்டு, பல சட்ட ஒப்பந்தங்களில் கைச்சாத்திடப்படும் என வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!