எரிபொருள் வரிசையில் காத்திருந்த மற்றுமொருவர் உயிரிழப்பு!

Prabha Praneetha
3 years ago
எரிபொருள் வரிசையில் காத்திருந்த மற்றுமொருவர் உயிரிழப்பு!

அத்துருகிரிய பகுதியில் எரிபொருள் கொள்வனவு செய்ய வருகைத் தந்த நபரொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் கடந்த 26ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்த 85 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.வேனொன்றில் வருகைத் தந்து, எரிபொருளை நிரப்புவதற்காக வரிசையில் நின்றுக் கொண்டிருந்த தருணத்தில் ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக, அவர் அத்துருகிரிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்த நபர், இருத நோயினால் பாதிக்கப்பட்டவர் என குறிப்பிடப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அத்துருகிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்இதற்கு முன்னர் இவ்வாறு எரிவாயு மற்றும் எரிபொருள் கொள்வனவிற்கான வரிசைகளில் காத்திருந்த சிலர் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோன்று சிலர் உயிரிழந்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!