இன்றைய தினம் திறந்து வைக்கப்படவுள்ள யாழ்ப்பாணப் பண்பாட்டு மையம்!

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியில் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணப் பண்பாட்டு மையம் இன்று திறந்து வைக்கப்பட உள்ளது.
இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரும் இன்றயை தினம் திறந்துவைப்பர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் கொழும்பு வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜப்கச ஆகியோரால் இன்று நண்பகல் 12.30 மணிக்கு காணொளி காட்சியூடாக திறந்து வைக்கப்பட உள்ளது.
இவ்வாறு இன்றைய தினம் மிகவும் எளிமையான முறையில் திறந்து வைக்கப்படும் யாழ்ப்பாணப் பண்பாட்டு மையம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் திறந்து வைக்கப்பட்ட பின்னரே பொதுமக்கள் பாவனைக்காக கையளிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
2015 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பிரதமர் நரேந்திர மோடியின் யாழ்ப்பாண விஜயத்தின் போது இந்த பண்பாட்டு மையம் குறித்து அறிவிக்கப்பட்டது.
1.6 பில்லியன் இந்திய நிதியுதவியின் கீழ் 2016 ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில் பல்வேறு காரணிகளின் அடிப்படையில் திறப்பு விழாவிற்கான திகதி ஒத்திவைக்கப்பட்டு கொண்டே வந்தநிலையில் இன்றைய தினம் எளிமையாக திறந்து வைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது



