இலங்கையிலிருந்து தப்பிச்சென்ற 132 பேருக்கு இன்டர்போல் சிவப்பு அறிவித்தல்!
#Crime
#International
Mayoorikka
3 years ago
இலங்கையிலிருந்து தப்பிச்சென்றுள்ள போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுடன் தொடர்புடைய 132 பேருக்கு எதிராக சர்வதேச காவல்துறை (இன்டர்போல்) ஊடாக சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட காவல்துறை ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இவர்களில் பெரும்பாலானோர் தற்போது துபாயில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை , கடந்த ஆண்டு போதைப்பொருள் தொடர்பான சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின்போது 95,000 சந்தேக நபர்களை இலங்கை காவல்துறையினரும் காவல்துறை விசேட அதிரடிப்படையினரும் கைதுசெய்துள்ளனர்.
இதன்போது 1,630 கிலோகிராம் ஹெரோயின், 15,000 கிலோகிராம் கஞ்சா மற்றும் 1,377 கிலோகிராம் செயற்கை போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தெரிவித்தார்