விடுகதை - 24 வயது பெண்ணுக்கு 22 குழந்தைகள்...? எல்லாம் 2 வயது அது எப்படி?

Prasu
4 years ago
விடுகதை - 24 வயது பெண்ணுக்கு 22 குழந்தைகள்...? எல்லாம் 2 வயது அது எப்படி?

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தைச் சேர்ந்தவர் கிறிஸ்டினா ஓஸ்டர்க். 24 வயதான இந்தப் பெண்ணுக்கு இப்போது 22 குழந்தைகள் உள்ளன. கிறிஸ்டினாவின் கணவர் பெயர் காலிப். இவர்கள் இருவரும் வாடகை தாய் முறையில் 22 குழந்தைகளை பெற்றுள்ளனர். இதற்காக அவர்கள் 195,000 டாலர்களை( இந்திய மதிப்பில் ரூ1.50 கோடி)  செலவு செய்துள்ளனர்.

கிறிஸ்டினாவின் இந்த பெரிய குடும்பம் குறித்த பதிவு  இன்ஸ்டாகிராம் தளத்தில் வைரல் ஆனது. இவர்களுக்கு எப்படி இத்தனை குழந்தைகள் என்பதை நெட்டிசன்களால் புரிந்து கொள்ள இயலவில்லை. கிறிஸ்டினாவின் 22 குழந்தைகள் மற்றும் காலிப், அவரது முன்னாள் மனைவி மூலமாக பெற்ற 6 வயது மகள் உள்பட தற்போது ஒரே வீட்டில் 23 குழந்தைகள் வசித்து வருகின்றன.

இதுகுறித்து கிறிஸ்டினா கூறுகையில், நான் எப்போதும் குழந்தைகளுடனே இருக்கிறேன். ஒரு தாய் செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் செய்து கொண்டிருக்கிறேன். ஆனால், ஒரேயொரு வேறுபாடு என்ன என்றால், குழந்தைகளின் எண்ணிக்கை தான்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4