430 அடி உயர ராட்டினத்தில் இருந்து விழுந்து சிறுவன் உயிரிழப்பு
#United_States
#Death
Prasu
3 years ago

அமெரிக்காவின் மத்திய புளோரிடாவில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவுக்கு மிசோரி பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் சாம்ப்சன் தனது நண்பர்கள் குடும்பத்துடன் சென்றான். அங்குள்ள 430 அடி உயரமுள்ள ராட்சத ராட்டினத்தில் சிறுவன் சாம்ப்சன் சவாரி செய்தான்.
அப்போது எதிர்பாராத விதமாக ராட்டினத்தில் இருந்து திடீரென்று கீழே விழுந்தான். படுகாயம் அடைந்த சிறுவனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறுவன் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து பொழுதுபோக்கு பூங்கா இயக்குனர் ஜான் ஸ்டைன் கூறும்போது, ராட்டினத்தில் இருந்து சிறுவன் விழுந்து பலியான சம்பவத்தால் நாங்கள் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளோம். என்ன நடந்தது என்பதை அறிய எல்லா விசாரணைக்கும் நாங்கள் ஒத்துழைப்போம் என்றார்.



