மூன்று தடுப்பூசியும் பெற்றவர்களுக்கே சமையல் எரிவாயு வழங்கப்படுமாம்

நாட்டில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக, மக்கள் சிலிண்டர்களை பெறுவதற்கு நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர். இந்த நிலையில் யாழில் பிரதேச செயலகங்கள் ஊடக, நேற்று எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் சிலிண்டரை பெறுவதற்கு மக்கள் குவிந்துள்ளனர். கொரோனாவுக்கு எதிராக 3 தடுப்பூசி பெற்றவர்களுக்கு மட்டுமே சிலிண்டர் வழங்கப்படும் என அங்கு தெரிவித்த நிலையில், மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட தாய் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்: நான் முதலாவது தடுப்பூசி பெற்றுக்கொண்டேன். அடுத்தடுத்த தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்கு எனது உடல் நிலை சரியில்லை. இன்று சமையல் எரிவாயுவை பெற்றுக்கொள்வதற்கு நாம் இங்கு வந்து நிற்கின்றோம்.
ஆனால் 3 தடுப்பூசி பெற்றவர்களுக்கு மட்டுமே சிலிண்டர் தருவோம் என்கிறார்கள் என்ன செய்வது, மனம் வெந்து கஷ்டப்படுகின்றோம்



