என் தோல் வெண்மையாக இருப்பதாக அமைச்சர் பலர் முன்னிலையில் கூறினார்: ஷர்மிளா ராஜபக்ச
Prathees
3 years ago

தனது தோல் வெண்மையாக இருந்தமையினால் ஊடகவியலாளர்கள் தனக்கு ஆதரவளித்ததாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் தெரிவித்ததாக தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஷர்மிளா ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ரிதீகம சபாரி பூங்காவில் இடம்பெற்ற பிரச்சினைக்குரிய சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அமைச்சின் செயலாளர் மற்றும் பலர் முன்னிலையில் அமைச்சர் இதனை தெரிவித்ததாக குறிப்பிட்டார்.
இது வருத்தம் தருவதாகவும், அதற்காக வெட்கப்படுவதாகவும் கூறினார்.
வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க, பணிப்பாளர் நாயகத்தை இதற்கு முன்னர் கண்டித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.



