மிக விரைவில் அரசாங்கத்தின் பெரும்பான்மை பலம் பறிபோகும்- விமல்
Prabha Praneetha
3 years ago

அரசாங்கத்தின் பெரும்பான்மை பலம் விரைவில் இழக்கப்படும் என ஜாதிக நிதஹஸ் பெரமுனவின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 11 கட்சிகள் இணைந்து தயாரித்த ‘ரத ஹரி மகத்த’ தேசிய வேலைத்திட்டத்தை இன்று மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளிடம் கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.



