மக்களின் வாழ்க்கை செலவீனம் அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து பசறை பிரதேச சபை உறுப்பினர் நூதன போராட்டம்!
#government
Reha
3 years ago

மக்களின் வாழ்க்கை செலவீனம் அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஐக்கிய மக்கள் சக்தியை தற்போது பிரதிநிதித்துவப்படுத்தும் பசறை பிரதேச சபை உறுப்பினர் எஸ். கார்த்தீஸ்வரன் பிரதேச சபை வாளாகத்தில் இன்று (24) முற்பகல் மொட்டையடித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
இதன்போது, நாட்டின் பகுதிகளை சீனாவுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையில் சமைக்காத இறாலை உண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



