இந்திய பிரதமருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நன்றி தெரிவிப்பு
Prabha Praneetha
3 years ago

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்திய அரசாங்கம் வழங்கிய ஆதரவிற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார்.
பிரதமரின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அண்மையில் இலங்கைக்கு பெற்றுக் கொடுத்த கடன் உதவி தொடர்பில் நன்றி தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்காலத்திலும், இந்திய அரசாங்கம், இலங்கையின் விவகாரங்கள் மற்றும் இலங்கையின் அபிவிருத்தி தொடர்பில் விசேட கவனம் செலுத்தும் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.



