இலங்கையில் கர்ப்பிணி மனைவிக்காக பலாக்காய் பறித்த கணவருக்கு நேர்ந்த கதி!
#SriLanka
#Murder
#Police
Nila
3 years ago

இலங்கையில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கர்ப்பிணியான மனைவிக்காக பலாக்காய் ஒன்றை பறித்த இளைஞனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
தனது உறவினர் ஒருவரின் வளவிலுள்ள தோட்டத்தில் பலாக்காய் பறிந்தமையினால் இந்த கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் வடக்கு எல்பிட்டிய, எகொடகெதர பகுதியைச் சேர்ந்த 34 வயதான கே.எம்.ஷெஹான் லசந்த என்பவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரான உயிரிழந்தவரின் மாமா ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



