நாட்டை விட்டு வெளியேறுவதற்கான கோரிக்கையை திரும்பப் பெற்றார் டொக்டர் ஷாபி
Prathees
3 years ago

டொக்டர் ஷாபி ஷெஹாப்தீன் வெளிநாடு செல்வதற்கு அனுமதி கோரி நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கையை வாபஸ் பெறுவதாக குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி குருநாகல் நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
நேற்று (23) குருநாகல் நீதவான் நீதிமன்றில் கலாநிதி டொக்டர் ஷாபி மீதான வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட போதே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மக்காவிற்கு புனிதப் பயணம் மேற்கொள்வதற்கான தனது இரண்டு வார பயணத் தடையை நீக்குமாறு குருநாகல் நீதவான் நீதிமனறத்திடம் டொக்டர். ஷாபி முன்னர் கோரிக்கை விடுத்திருந்தார்.
ஷாபி நாட்டை விட்டு வெளியேற தடை விதித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டாம் என்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த வழக்கை ஜூன் 24ஆம் திகதிக்கு ஒத்திவைக்க குருநாகல் நீதவான் உத்தரவிட்டார்.



