2022 சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம்

15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 26-ந்தேதி மும்பையில் தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி இன்று அறிமுகம் செய்யப்பட்டது. இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி விஸ்வநாதன் அறிமுகப்படுத்தினார்.
ஐபிஎல் போட்டியில் 4 முறை கோப்பையை கைப்பற்றியதை குறிப்பதற்காக புதிய ஜெர்சியில் லோகோவுக்கு மேல் 4 நட்சத்திரம் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் சிஎஸ்கே-வின் முதன்மை ஸ்பான்சரான TVS Eurogrip இரு மற்றும் மூன்று சக்கர டயர் பிராண்டின் லோகோவும் இடம்பெற்றுள்ளது.
Unveiling with Yellove! ?
— Chennai Super Kings (@ChennaiIPL) March 23, 2022
Here’s a ? at our new threads in partnership with @TVSEurogrip! ?#TATAIPL #WhistlePodu ? pic.twitter.com/pWioHTJ1vd
இது குறித்து சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி கூறியதாவது:- நம்பகமான, வெற்றிகரமான மற்றும் பாரம்பரிய பிராண்டின் டிவிஎஸ் யூரோ கிரிப் லோகோவை புதிய ஜெர்சியில் வைத்திருப்பதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்கிறது.
நமது ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், ராணுவத்திடம் எங்கள் கேப்டனுக்கு உள்ள தொடர்பின் அடையாளமாகவும், கடந்த ஆண்டு ஜெர்சியில் ராணுவ சீருடையின் வண்ணத்தை அறிமுகப்படுத்தினோம். தற்போது ஜெர்சியின் பின்புறம் உள்ள காலரிலும் சேர்த்துள்ளோம்.



