லண்டன் சிறைச்சாலையில் காதலியை திருமணம் செய்த விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சே

#Prison #wedding
Prasu
4 years ago
லண்டன் சிறைச்சாலையில் காதலியை திருமணம் செய்த விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சே

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே தனது நீண்டகால காதலியான ஸ்டெல்லா மோரிசை, லண்டனில் உள்ள சிறைச்சாலையில் இன்று திருமணம் செய்துகொண்டார். 

ஜூலியன் அசாஞ்சே தனது விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் மூலம் அரசாங்க ரகசியங்களை ஹேக் செய்தது தொடர்பான வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் உள்ளார். 50 வயதான ஜூலியன் அசாஞ்சே, 2019 முதல் தென்கிழக்கு லண்டனில் உள்ள பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதற்கு முன்பு லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் ஏழு ஆண்டுகளாக தங்கி இருந்தார்.

2011 ஆம் ஆண்டு லண்டன் தூதரகத்தில் இருந்த போது அவருக்கும் ஸ்டெல்லா மோரிஸ் (வயது 37) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மோரிஸ், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக  ஜூலியன் அசாஞ்சேவின் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். 2015 ஆம் ஆண்டு முதல் இவர்கள் காதலித்து வந்த நிலையில், இன்று திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறைச்சாலையில் நடந்த  திருமணத்தில் 4 விருந்தினர்கள் மற்றும் இரண்டு சாட்சிகள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படட்தாக அசாஞ்சேவின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4