ரணிலின் கேள்வியில் தடுமாறிய பஷில் − சர்வகட்சி மாநாட்டில் நடந்தது என்ன?
#SriLanka
#Ranil wickremesinghe
#Basil Rajapaksa
Nila
3 years ago

இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸவிடம் கோரிக்கை விடுத்தார்.
ஜனாதிபதி வாசஸ்தலத்தில் இன்று இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் கலந்துக்கொண்ட போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்தார்.
எனினும், தமக்கு இதுவரை சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை கிடைக்கவில்லை என முதலில் பஷில் ராஜபக்ஸ தெரிவித்த நிலையில், ரணில் விக்ரமசிங்க குறுக்கிட்டு எழுப்பிய கேள்விகளை அடுத்து, நிதியத்தின் அறிக்கை வரைவு கிடைத்துள்ளதை நிதி அமைச்சர் ஏற்றுக்கொண்டார்.
எனினும், தாம் சர்வதேச நாணய நிதியத்துடன் பல்வேறு சவால்களை விடுத்துள்ளமையினால், அந்த வரைவை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியாது என பஷில் ராஜபக்ஸ பதிலளித்தார்



