சந்தையில் முகக்கவசங்களுக்கான விலை இன்று முதல் 30 சதவீதத்தினால் அதிகரிப்பு!
Reha
3 years ago

சந்தையில் முகக்கவசங்களுக்கான விலை இன்று முதல் 30சதவீதத்தினால் அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை முகக்கவச உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
முகக்கவசங்களை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை பெற்றுக் கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் விதுர அல்கம தெரிவித்துள்ளார்.



