மே தினமன்று காலிமுகத்திடலில் மக்கள் அலையைத் திரட்ட பஸில் வியூகம்
#Basil Rajapaksa
#Protest
Prasu
3 years ago

ஆளும் கூட்டணியின் தலைமைக் கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மே தினக் கூட்டத்தை காலிமுகத்திடலில் பெருமெடுப்பில் நடத்துவதற்கு அக்கட்சியின் ஸ்தாபகரான நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தீர்மானித்துள்ளார்.
இதன்படி காலிமுகத்திடம் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் கொழும்பு மாநகர சபைக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த மே தின கூட்டத்துடன் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கையும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அரசுக்கு மக்கள் ஆதரவு உள்ளது என்பதைக் காட்டும் விதமாக மாபெரும் கூட்டத்தைத் திரட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.



