ஆர்ப்பாட்டத்தால் கந்தரோடை விகாரைக்கு செல்வதை கைவிட்டார் பிரதமர் ?

#SriLanka #Jaffna #PrimeMinister
ஆர்ப்பாட்டத்தால் கந்தரோடை விகாரைக்கு செல்வதை கைவிட்டார் பிரதமர் ?

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணம் - கந்தரோடை விகாரைக்கு வழிபடுவதற்காக செல்லவிருந்த தனது திட்டத்தை கைவிட்டுள்ளாரென தகவல் வெளியாகியுள்ளது.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்றைய தினம் மத ஸ்தலங்களுக்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்ட நிலையில் அதன் ஒரு அங்கமாக கந்தரோடை விகாரைக்கும் சென்று வழிபட தீர்மானித்திருந்தார்.

கந்தரோடை விகாரையில் பிரதமர் அடிக்கல் நாட்டுவதாக செய்தி வெளியான நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்களும் தமிழ் தேசிய மக்கள் முன்ணணியும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திடீரென கந்தரோடை விகாரைக்கான தனது விஜயத்தை ரத்து செய்தார்.

இதனையடுத்து அப்பகுதியில் பிரதமரது பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்த பொலிஸாரும் இராணுவத்தினரும் அங்கிருந்து விலகிச்சென்றமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை நாவற்குழியிலுள்ள பிக்குமார் விடுதியை பிரதமர் இன்று திறந்து வைத்துள்ளார்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!