மின் பட்டியல்களை எழுத்து மூலம் வழங்குமாறு அறிவித்தல்

Mayoorikka
3 years ago
மின் பட்டியல்களை எழுத்து மூலம் வழங்குமாறு அறிவித்தல்

இலங்கையில் கடதாசி மற்றும் அச்சடிக்கும் பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக மின் பட்டியல்கள் அச்சிடும் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின் பாவனையாளர்களுக்கு மின் பட்டியல்களை எழுத்து மூலம் வழங்குமாறு மின் வாசிப்பாளர்களுக்கு அறிவித்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் மேலதிக பொது முகாமையாளர், ஊடகப்பேச்சாளர் அன்ரூ நவமணி தெரிவித்தார்.

மின் பட்டியல்கள் தொடர்பில் ஏதேனும் சிக்கல் நிலவினால், இலங்கை மின்சார சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் பிரவேசித்து, தேடி அறிந்துகொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

விரும்பிய பாவனையாளர்களுக்கு இலத்திரனியல் மின் பட்டியல்களை பெற்றுக்கொடுக்குமாறு இலங்கை மின்சார சபைக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!