அரசாங்கத்தின் பொருளாதாரத்தை கட்டுப்படுத்தும் பசில் - கப்ரால் இரண்டாக பிரிவு: ஹர்ஷ டி சில்வா வெளியிட்ட தகவல்

Prathees
3 years ago
அரசாங்கத்தின் பொருளாதாரத்தை கட்டுப்படுத்தும் பசில் - கப்ரால் இரண்டாக பிரிவு:  ஹர்ஷ டி சில்வா வெளியிட்ட தகவல்

பொருளாதார நெருக்கடி தொடர்பில் சரியான தீர்மானம் எடுக்க முடியாத நிலையில் அரசாங்கம் தற்போது பசில் ராஜபக்சவின் அணி மத்திய வங்கி ஆளுநர் அணி என இரண்டு அணிகளாக பிளவுபட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் கடந்த 16ஆம் திகதி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த இழுபறியால் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவும் திறைசேரி செயலாளரும் இலங்கையிலுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்கு ஏற்பாடு செய்த போதிலும், பொருளாதாரத்தில் முக்கிய பதவி வகிக்கும் மத்திய வங்கியின் ஆளுநர் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை சந்திக்கவில்லை.

மத்திய வங்கியின் ஆளுநரை பதவி நீக்கம் செய்ய இந்த அரசாங்கம் முயற்சிப்பதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவி வருகின்றது.

அது உண்மையா, அல்லது எனக்குத் தெரியாது. எனினும் வழமை போன்று பொருளாதார நெருக்கடியை துடைத்தெறிய ராஜபக்சக்கள் முயற்சிக்கின்றனர்.

எனினும் இம்முறை மக்களை ஏமாற்றுவது கடினமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமான ஆறு காரணிகளை சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

சமகி ஜனபலவேகயவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளாத மக்கள் தற்போது வீதியில் இறங்கியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!