பொலித்தீன் சார்ந்த உற்பத்திகளின் விலைகள் 40 சதவீதத்தினால் அதிகரிப்பு!
Prabha Praneetha
3 years ago

பொலித்தீன் சார்ந்த உற்பத்திகளின் விலைகள் 40 சதவீதத்தினால் அதிகரித்துள்ளன.
அகில இலங்கை பொலித்தீன் உற்பத்தியாளர்கள் மற்றும் மீள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அநுர விஜேதுங்க இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
டொலர் பற்றாக்குறை காரணமாக மூலப்பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக பொலித்தீன் சார்ந்த உற்பத்திகளின் விலையை அதிகரிக்க நேரிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அரிசியை பொதியிடப் பயன்படுத்தும் பை ஒன்றின் விலையை 35 ரூபாவால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரிசி பை உற்பத்தியார்கள் முன்னர் அறிவித்திருந்தனர்.



