சரிந்து செல்கின்றது அரசின் செல்வாக்கு கோட்டாவின் கையில் புலனாய்வு அறிக்கை

#Sri Lanka President #Gotabaya Rajapaksa
Prasu
3 years ago
சரிந்து செல்கின்றது அரசின் செல்வாக்கு கோட்டாவின் கையில் புலனாய்வு அறிக்கை

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைவரம் தொடர்பான புலனாய்வு அறிக்கை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையானது அரசுக்கு அவ்வளவு நல்லதாக இல்லை என்றே கூறப்பட்டுள்ளது.

மக்கள் மத்தியில் அரசுக்கான செல்வாக்கு நாளாந்தம் வீழ்ச்சியடைந்து வருகின்றது எனவும், தீவிர ஆதரவை வெளிப்படுத்தியர்கள்கூட மாற்றுவழியை நாடுகின்றனர் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
அதேபோல் அரசு மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதால், ஐக்கிய மக்கள் சக்திக்கான ஆதரவு 17 வீதத்தால் அதிகரித்துள்ளது எனவும் புலனாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சரவையில் இருந்து விலக்கப்பட்டுள்ளதால், அரசின் வாக்கு வங்கிக்கு ஏற்படும் தாக்கம் பற்றி தற்போதே ஒரு முடிவுக்கு வரமுடியாது எனவும் மேற்படி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது எனத் தெரியவருகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!